/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக்கில் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் அமல்
/
டாஸ்மாக்கில் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் அமல்
டாஸ்மாக்கில் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் அமல்
டாஸ்மாக்கில் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் அமல்
ADDED : ஜன 19, 2024 11:34 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்கள் வாங்கி, திரும்ப பெரும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, தர்மபுரி டாஸ்மாக் பொது மேலாளர் மகேஸ்வரி கூறியதாவது:
தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மதுபானங்களை வாங்கும் மது பிரியர்கள், திறந்தவெளிகளில் மதுபானம் குடித்து வருகின்றனர். இவர்களில் சிலர், தாங்கள் மது குடிக்கும் பாட்டில்களை விவசாய நிலங்கள், சாலையோரங்கள் என, அவர்கள் நினைத்த இடத்தில் பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். குறிப்பாக, சுற்றுலாத்தளம் உள்ள இடங்களில், இதுபோல் பாட்டில்களை உடைப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு
வருகின்றனர்.
இதை தடுக்க, டாஸ்மாக் கடைகளில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் இன்று முதல், மது பாட்டில்களில் 'க்யூஆர்' கோடு உள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டி, மது விற்பனை செய்யப்படும். இவ்வாறு ஒட்டியுள்ள மது பாட்டில்களை, மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு, பாட்டில்களை உடைகாமல் மீண்டும் டாஸ்மாக் கடைகளில் திருப்பி தரவேண்டும். இவ்வாறு அவர்கள் தரும் பாட்டிலுக்கு, முன் கூட்டியே அவர்கள் வழங்கிய, 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.
ஆனால், அந்த பாட்டில்களை அவர்கள் வெளியில் எங்கேயாவது உடைத்து விட்டால், அவர்கள் முன்கூட்டியே செலுத்தப்பட்ட, 10 ரூபாய் திருப்பி வழங்கப்பட மாட்டாது. இதை, தர்மபுரி மாவட்ட மதுப்பிரியர்கள் தெரிந்து கொண்டு, பாட்டில்களை உடைக்காமல், டாஸ்மாக் கடைகளில் திரும்ப வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

