ADDED : ஜன 24, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பழநி முருகன் கோயிலில் நடக்கும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 350 சிறப்பு பஸ்கள் ஜன.22 முதல் இயக்கப்படுகிறது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பழநிக்கு வரும் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் ஜன.28 வரை இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு உதவ போக்குவரத்து அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

