ADDED : ஜன 21, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு,: கரூர் மாவட்டம் மன்மங்கலம் ஆண்டாள் கோயிலை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் 26. டையிங் யூனிட்டில் ஆப்பரேட்டராக உள்ளார். இவரது சித்தப்பா முத்துக்கிருஷ்ணன், அவரது மகன் தேவதர்சன் இவர்கள் உடன் டூவீலரில் சென்றனர். முத்துக்கிருஷ்ணன் ஓட்டினார்.
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தின் மேல் செல்லும்போது பின்னால் வந்த ஈரோடு மாவட்டம் திண்டல் வீரப்பன் பாளையத்தைச் சேர்ந்த ராஜ் ஓட்டி வந்த டூவீலர் மோதியது.
இதில் ராஜேஷ்குமார், முத்துக்கிருஷ்ணன், தேவதர்ஷன் ராஜ், அவருடன் வந்த பிரகாஷ் காயமடைந்தனர். திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாடிக்கொம்பு எஸ்.ஐ., பிரபாகரன், ராஜ் விசாரிக்கின்றனர்.

