/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முகாம்கள் வாயிலாக 6662 பேருக்கு வேலை
/
முகாம்கள் வாயிலாக 6662 பேருக்கு வேலை
ADDED : ஜன 10, 2024 06:45 AM
திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 1144 தனியார் நிறுவனங்களில் 6662 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக'' செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது : படித்த இளைஞர்கள் அரசு , தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சித் துறை போன்ற துறைகளின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் , வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதோடு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படுகின்றன.
திண்டுக்கல், வேடசந்துார் , பழநியில் நடந்த முகாமில் 8 ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, பொறியியல் படித்த இளைஞர்கள் கல்வி தகுதிக்கேற்ப பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இதில் முடிந்த 3 ஆண்டுகளில் நடந்த 19 முகாம்களில் 1744 பேர் , 211 தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றதில் 324 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொழிலாளர் நலன் , திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் சார்பில் நடந்த 6 முகாம்களில் 32,705 பேர், 933 தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றதில் 6338 பேர் வேலை பெற்றுள்ளனர். 1,66,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 1144 நிறுவனங்களில் 6662 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.

