/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி செல்லும் 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடி குழு
/
பழநி செல்லும் 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடி குழு
பழநி செல்லும் 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடி குழு
பழநி செல்லும் 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடி குழு
ADDED : ஜன 23, 2024 05:02 AM

நத்தம்: -400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடி குழுவினர் நத்தம் வழியாக பழநி முருகன் கோயிலுக்கு சென்றனர். இவர்களுக்கு வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பழநி முருகனைத் தரிசிக்க ஆண்டுதோறும் 21 நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியிலிருந்து பாதயாத்திரையாக நகரத்தார் காவடி குழுவினர் செல்கின்றனர்.
இதையொட்டி ஜன. 16 தேவகோட்டை நகர பள்ளிக்கூடத்திலிருந்து காவடிகளுக்கு பூஜை செய்து 331 சர்க்கரை காவடிகளைத் தாங்கியப்படி 76 ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழநி நோக்கி புறப்பட்டனர்.
இந்தக் குழுவினர் நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தனர். அங்கு பானகபூஜை நடந்தது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாட காவடிகள் நத்தம் மாரியம்மன் கோயில்தெரு, பெரியகடை வீதி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பாதைகளின் வழியாக பழநி நோக்கி சென்றனர். முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வேலும் கொண்டு செல்லப்பட்டது.
இதை பக்தர்கள் வணங்கி பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் செலுத்தி வழிபட்டனர். வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வரவேற்று வழியனுப்பினர்.
ஜன.25 தைப்பூசத்தன்று பழநி சென்றடையும் காவடிகள் ஜன. 28ல் முருகன் கோயிலில் காவடி வழிபாடு நடத்துகின்றனர்.

