ADDED : ஜன 24, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை : செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் குமாரி 40. இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். இவரது பசுமாட்டை நேற்று முன்தினம் தனது தோட்டத்து வீட்டில் கட்டி வைத்திருந்தார். அதிகாலையில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு மாடு பசுமாட்டை கொம்பால் குத்தி தாக்கியது.
இதில் பசு குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடித்தது. கோட்டைப்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கால்நடைதுறையினர் சிகிச்சை அளித்தனர். நேற்று பசுமாடு இறந்தது .

