/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாதனைகளுக்கு வித்திடும் அட்சய பாத்திரமாய் ஒரு விழா: தமிழுடன் பிற மாநில கலாசாரத்திற்கும் பெருமை சேர்ப்பு
/
சாதனைகளுக்கு வித்திடும் அட்சய பாத்திரமாய் ஒரு விழா: தமிழுடன் பிற மாநில கலாசாரத்திற்கும் பெருமை சேர்ப்பு
சாதனைகளுக்கு வித்திடும் அட்சய பாத்திரமாய் ஒரு விழா: தமிழுடன் பிற மாநில கலாசாரத்திற்கும் பெருமை சேர்ப்பு
சாதனைகளுக்கு வித்திடும் அட்சய பாத்திரமாய் ஒரு விழா: தமிழுடன் பிற மாநில கலாசாரத்திற்கும் பெருமை சேர்ப்பு
ADDED : ஜன 14, 2024 03:58 AM

திண்டுக்கல்
பள்ளியின் நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகளின் வரவேற்பு தோரணங்கள், சீருடையில் பணியாளர்களின் கைதேர்ந்த அணுகுமுறை,மின்னொளி ஜொலிப்பில் அலங்கார மேடைகள், அதில் நட்சத்திரங்களாய் கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்கள்,பிரமிப்பை நிமிடமும் விலக்காத ஒலியமைப்பு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இருக்கைகள், நவீன துவத்தின் அடையாளமாய் டிஜிட்டல் மின்னொளி திரைகள், அறுசுவை உணவுகளின் அணிவகுப்பில் உணவு திருவிழா, ஆசிரியர்களின் அயராத உழைப்பு, பெற்றோர்களின் பூரிப்பு என ஒருங்கே காட்சியளித்த இடம்தான்
தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள அச்யுதா பள்ளி . நவீன அலைபேசி யுகத்தில் இந்த பள்ளியின் 10 ம் ஆண்டு விழாவை 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கண்டுரசித்தது என்பது காற்றில் கலந்த சாதனையாக சத்தமின்றி வலம் வந்தது.
கல்வியை தாண்டிய கலை சிந்தனை
ரெனிதா, கம்ப்யூட்டர் ஆசிரியை: நான் பணியில் இணைந்த ஐந்தாம் ஆண்டில் எங்கள் பள்ளியின் 10வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறேன். எல்.கே.ஜி.,பயின்ற மாணவர்கள் கூட அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளில் சாதிக்கின்றனர். சிறந்த தொகுப்பாளராக உருமாற்றம் பெற்று பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். கல்வியை தாண்டிய கலை சிந்தனையில் பள்ளியின் அணுகுமுறை மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கான சிறந்த ஊக்கியாக இருந்து வருகிறது. இதில் பயிற்றுனர் என ஆசிரியராக நாங்களும் பெருமிதம் கொள்கிறோம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
உதிக்சா தனு, 6ம் வகுப்பு மாணவி: கிளாசிக் நடனத்தில் ஈடுபாடு கொண்ட எனக்கு சிறந்த மேடைக்களம் அமைத்து தந்து அரங்கேற்றுவதில் எங்கள் பள்ளிக்கு வாழ்நாள் நன்றியை சமர்ப்பிக்கிறேன். எனது வாழ்வின் லட்சியமான மருத்துவர் படிப்புக்கு வழிகாட்டியாகவும், மருத்துவரின் ஆலோசனையான நோயற்ற வாழ்விற்கான உடற்பயிற்சி அம்சங்களை, பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகள் மூலம் நடன நிகழ்ச்சி வடிவில் மாணவர்களை தயார்படுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையை கற்று தருகிறது.
எண்ணம் அறிந்து வளர்க்கிறது
தனுஜ், 6ம் வகுப்பு மாணவர்: கற்றலின் கேட்டல் நன்று எனும் கோட்பாட்டில் என்னை முதல் வரிசையில் அமர்த்தி பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளை உற்று நோக்க செய்துள்ளனர் ஆசிரியர்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இருந்த எனது மனமானது தற்போது இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சாதிக்க துடிக்கிறது. மாணவர்களின் எண்ணம்
அறிந்து அவர்கள் வழிமுறையில் வாழ்வை செம்மை படுத்துவதில் எமது பள்ளிக்கு நிகரில்லை என்பதை பெருமையுடன் பதிவிடுகிறேன்.
மொழி பாகுபாடின்றி கலைநிகழ்ச்சி
ஸ்பான், 10ம் வகுப்பு மாணவர்: நான் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவனாவேன். தமிழ் மொழி சரளமாக பேச வராது. இருந்தாலும் ஓரளவு புரிந்து கொள்வேன். பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மொழிக்கு அப்பார்ப்பட்ட வகையில் கலையை முன்னிறுத்தி அரங்கேற்றம் செய்யப்படுவது பெருமையளிக்கிறது. இந்த விழாவில் ஆங்கில நாடகத்தில் முக்கிய
கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். எனக்கு தெரிந்த வரையில் எங்கள் பள்ளியின் பாடமுறை திட்டங்கள் சர்வதேச தரத்திற்கு ஒப்பானதாகும். ஆண்டு விழாவில் பிற மாநில கலாசார நடன, நிகழ்வுகளை நடத்துவது பெருமையாக உள்ளது.
பெற்றோர்களுக்கான விழா
மங்களராம், பள்ளி தாளாளர்: திறமை, உடற்பயிற்சி, தேசப்பற்று, கலை தேர்ச்சி, அலங்காரம், ஒப்பனை என பல தரப்பிலும் தங்களை தயார் செய்து நிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கத்தில் நிறைவேற்றினர். உண்மையில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் என்பவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமேயாவர். விழாவில் மாணவர்களின் பெற்றோர்களை சிறப்பிக்க செய்யும் வகையில் டிஜிட்டல் மின்னொளி பலகையில் அவர்களின் குடும்ப போட்டோக்களை ஒளிபரப்பியபோது அனைவர் முகத்திலும் நிலவிய பரவசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விழாவானது மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுக்கான விழாவாகும்.
ஆசிரியர்களை பிரமிக்க செய்தது
சந்திரசேகரன், முதன்மை முதல்வர்: தனியொரு மனிதருக்கு சாதனை புரிவதில் துறை என ஏதும் வரையறுக்க படவில்லை. தனித்தன்மையை வெளிக்கொணர முயற்சிக்கும் ஒவ்வொருவரும் கண் இமை அசைவில் கூட சாதனைகள் படைத்து புகழை மேலோங்க செய்யலாம். அந்த வகையில் எமது பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேர் பார்வையாளர்கள் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளனர். அரங்கில் தனது திறமையை வெளிக்கொணர படிப்புக்கு இடையிலும் குறைந்தது ஒரு மாத பயிற்சியில் நிகழ்ச்சிகள் நடத்துவது ஆசிரியர்களான எங்களையே பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது.
பாரதியாரின் கொள்கைகள் முழங்கியது
பாரி, ஓய்வு எஸ்..பி.,: குழந்தைகள் மீது விருப்பத்தை திணிக்க கூடாது என்ற பொதுக்கருத்தை மீண்டும் பெற்றோர்கள் முன்வைக்கிறேன். மனித பிறப்பு என்பதே போட்டியிடும் ஆயிரம் அணுக்களை வென்று சாதித்த ஒரு நுண்ணுயிரியின் பரிணாம வளர்ச்சியாகும். சாதனைகளை தேடி அலையாமல் வாழ்க்கை பாதைகளிலே சாதனைகளின் தடத்தை பதிக்க செய்ய வேண்டும். நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாக பாரதியாரின் வரிகளில் வாழ்வை அச்சமின்றி நடத்த உறுதியேற்கும் விழாவாக இங்கு நிகழ்ச்சிகள் நடத்தி காட்டி உள்ளனர் அச்யுதா பள்ளி மாணவர்கள்.

