/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அச்யுதா அகாடமி பள்ளி ஆண்டு விழா
/
அச்யுதா அகாடமி பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 24, 2024 06:22 AM

திண்டுக்கல : திண்டுக்கல் அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 14வது ஆண்டுவிழா நடந்தது.
பள்ளி தாளாளர்கள் புருசோத்தமன், சுந்தராம்பாள், பள்ளியின் செயலாளர் மங்கள்ராம், செயலர் காயத்ரி மங்கள்ராம், பட்டாபிராமன் தலைமை வகித்தனர். 11ம் வகுப்பு மாணவிகள் ஹுப்ளின்,ரேணுகாதேவி வரவேற்றனர். பள்ளி முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். திண்டுக்கல் ஏ.எஸ்.பி.,சிபின் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தான்யா ஸ்ரீ, கோகுல தர்ஷினி, நாபியா, அப்சனா, ஷன்மதி. மகாராஜா, துருவ் தொகுத்து வழங்கினர். 11 ம் வகுப்பு மாணவிகள் காயத்ரி, ஷாஜிதா நன்றி கூறினர். ஏற்பாடுகளை துணை முதல்வர் குணசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தி, லெட்சுமி, சர்மிளா பேகம், ஜோசப் சுரேஷ், அந்தோணிதாஸ், லில்லி, ஆசிரியர்கள் மேலாளர் பிரபாகரன், கார்த்திக், ராஜசேகர், பிரபு, ஜான் கிரிஸ்டோபர் செய்தனர்.

