/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அமலாக்கத்துறை மனு இன்று ஒத்திவைப்பு
/
அமலாக்கத்துறை மனு இன்று ஒத்திவைப்பு
ADDED : ஜன 10, 2024 12:54 AM
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான அதிகாரியை, விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதிகோரிய மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சமாக வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் உள்ள அவரை இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜன.3ல் மனு செய்யப்பட்டது.
அந்த நீதித்துறை நடுவர் விடுப்பில் இருந்ததால் அதனை முதலாவது நீதித்துறை நடுவர் பிரியா விசாரித்து ஜன.9க்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அவர் விசாரணையை இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

