/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பு அகற்றம் எதிராக கடையடைப்பு
/
ஆக்கிரமிப்பு அகற்றம் எதிராக கடையடைப்பு
ADDED : ஜன 19, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிராக பழநி சன்னிதி வீதியில் அடிவாரம் வர்த்தக சங்கத்தினர், வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம் செய்தனர்.
பழநி அடிவாரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பின்படி அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர் தினமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடிவாரம் வர்த்தகர் சங்கத்தினர் நேற்று (ஜன.18) காலை 10:00 மணி முதல் அடிவாரம், சன்னதி வீதியில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

