/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்
/
வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்
வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்
வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்
ADDED : ஜன 24, 2024 06:17 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வனத்துறை உயரதிகாரிகள் கலந்து கொள்ளாத நிலையில் வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் என கூறி விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் வனத்துறையினர் வெளியேறினர்.
விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் ஆர்.டி.ஒ., ராஜா தலைமையில் நடந்தது. தாசில்தார் கார்த்திகேயன், தோட்டக்கலை துணை இயக்குனர் காயத்ரி, போக்குவரத்து கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், பி.டி. ஒ., ஜெசி ஞானசேகர், கால்நடை துறை உதவி இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்குவதற்கு முன் வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு இல்லாத நிலையில் சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வனத்துறை விவசாயிகள் பிரச்னையில் மெத்தனத்துடன் நடந்து கொள்கிறது.
டி.எப்.ஒ., கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது தொடர்வதால் வனத்துறையினர் வெளியேற வேண்டும். இல்லையேல் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின் வனத்துறையினர் வெளியேற கூட்டம் தொடங்கியது.
விவசாயிகள் விவாதம்
அசோகன் : வில்பட்டி போத்துப்பாறை பாரதி அண்ணா நகர் ரோடு அமைக்க வலியுறுத்திய போதும் நடவடிக்கை இல்லை.
ஆர்.டி.ஓ.,: ஒன்றிய நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கற்பகமணி : கூக்கால் ஏரி நீர் நிலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்தும் நடவடிக்கை இல்லை.
தாசில்தார் : பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூங்கொடி: கூக்கால் ஊராட்சியில் சில ஆண்டாக வளர்ச்சி பணிகள் நடக்காமல் முறைகேடு நடந்துள்ளது.
பி.டி.ஓ., : தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டு பி.டி.ஓ., மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. வளர்ச்சி பணி நடக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
ஏமாற்றத்தில் விவசாயிகள்
திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்த நிலையில் மலை விவசாயிகள் பங்கேற்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. இதையடுத்து கொடைக்கானலில் தனியாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சில ஆண்டாக கொடைக்கானலில் இக்கூட்டம் நடக்கிறது. சமீப காலமாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சம்மந்தமில்லாத விவாதங்கள் , மக்கள் குறைதீர் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டு நேரம் வீணடிக்கப்படுகிறது. விவசாயம் சம்மந்தமான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் பங்கேற்கும் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் அரங்கேறுகிறது. விவசாயிகள் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லாது சமூக ஆர்வலர் புகார்களுக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பதாக விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

