ADDED : மே 22, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனை, புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்  ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர்  ஜெயராமன் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர்கள் செந்தில்குமார், லீலாவதி ராமதாசு,  கண்ணன்,  பொருளாளர் ஆனந்த், கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கனகராஜ் ஆலோசனை வழங்கினர்.   துணைத் தலைவர்கள் மதன்குமார், சண்முகம், வள்ளி நடராஜன், நாச்சிமுத்து, தீபா, ரஞ்சிதம்,  செயலாளர்கள் ராம்தேவர்,  பூபதிராஜா,  ருத்திரமூர்த்தி,  பரமேஸ்வரி, ஜெய்கணேஷ், ஸ்ரீதர், பெரியசாமி  கலந்து கொண்டனர்.

