/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார்கள், டூவீலர் மோதி விபத்து பலி 1; காயம் 9
/
கார்கள், டூவீலர் மோதி விபத்து பலி 1; காயம் 9
ADDED : ஜன 19, 2024 05:36 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 2 கார்கள், டூவீலர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார், 9 பேர் காயமடைந்தனர்.
முருநெல்லிக்கோட்டை ஆசாரிபுதூரைச் சேர்ந்தவர் இளமாறன் 25. நண்பர்கள் நந்தகுமார் 25, கண்ணன் 28, ஆகியோருடன் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வேடசந்துார் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சென்றார். தேவச்சின்னாம்பட்டி பிரிவு அருகே சென்ற போது முன்னால் சென்ற காரை முந்த முயன்றார்.
எதிரே வந்த கார் டூவீலரில் மோதி, அடுத்து வந்த காரிலும் மோதியது. இளமாறன் பலியானார். டூவீலரில் வந்த இருவர், காரில் பயணித்த பிரதீப் குமார் 30, வான்மதி 25, பாக்கியலட்சுமி 65, சந்திரசேகரன், மற்றொரு காரில் இருந்த சடையப்பன், கார்த்திக், அஜித் என 9 பேர் காயமடைந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

