/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,மீது வழக்கு
/
அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,மீது வழக்கு
அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,மீது வழக்கு
அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,மீது வழக்கு
ADDED : ஜூன் 25, 2025 01:47 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நடந்த விபத்து வழக்கில் அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் 47. இவர் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரில் 'நான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் டிரைவராக உள்ளேன். ஜனவரியில் எனது மகன் விஷ்ணுவர்தன் பெயரில் கார் வாங்கினேன். அதனை பிரபல டாக்சி நிறுவனத்தோடு இணைத்து ஓட்டி வந்தார். இந்நிலையில் ஜூன் 16 ல் அம்மையநாயக்கனூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எனது மகன் மீது அம்மையநாயக்கனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்காக சென்ற போது, எஸ்.ஐ., ஷேக் அப்துல்காதர், எனது மகனை கைதுசெய்து ஜாமினில் விடுவிக்கவும், காரை வழக்கிலிருந்து பிரச்னையின்றி விடுவிக்கவும் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டார். முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை வாங்கி கொண்டார். அதை எனது மகன் அலைபேசியில் வீடியோவாக பதிவுசெய்துக்கொண்டார். பின் 17-ம் தேதி மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது மீண்டும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். கொடுக்க விருப்பமில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும்'என கூறியிருந்தார். இதன்படி எஸ்.ஐ., சேக் அப்துல்காதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.