நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: அணைப்பட்டியில் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார். அணைப்பட்டிக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதி, குளியலறை, துணி மாற்றும் இடம் ஆகியவற்றிற்கு இடம் தேர்வு செய்ய ஆய்வு நடந்தது.
பக்தர்கள் ஆற்றில் குளிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் ஊராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வைகை ஆற்றில் குளித்துவிட்டு துணிகளை ஆற்றிலேயே விட்டுச்செல்வதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது.
துணிகளை 2 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யவும் ஊராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. விளாம்பட்டி பிரிவிலிருந்து அணைப்பட்டி கோயில் வரை உள்ள ரோடு முழுவதும் சேதமடைந்துள்ளதால், இதனை புதுப்பிக்க கிராமத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.