/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நில அதிர்வுடன் வெடிச்சத்தம் திண்டுக்கல் பகுதி மக்கள் அச்சம்
/
நில அதிர்வுடன் வெடிச்சத்தம் திண்டுக்கல் பகுதி மக்கள் அச்சம்
நில அதிர்வுடன் வெடிச்சத்தம் திண்டுக்கல் பகுதி மக்கள் அச்சம்
நில அதிர்வுடன் வெடிச்சத்தம் திண்டுக்கல் பகுதி மக்கள் அச்சம்
ADDED : ஜன 14, 2024 12:12 AM
சாணார்பட்டி:திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் நேற்று நில அதிர்வுடன் வெடிச்சத்தம் கேட்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி, கோபால்பட்டி, கம்பிளியம்பட்டி, ராஜக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 11:38 மணிக்கு லேசான நில அதிர்வுடன் திடீர் வெடிச்சத்தம் கேட்டது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியேறினர்.
வடமதுரை, வேடசந்துார் பகுதியிலும் இது போன்ற வெடிச்சத்தம் கேட்டது. ஒரு மாத இடைவெளியில் இதுபோன்ற வெடிச்சத்தம், அதிர்வுகள் ஏற்படுகின்றன. அது 20 முதல் 30 கி.மீ., உள்ள பகுதிகளுக்கு அதிர்வு நீடிக்கிறது.
வடமதுரையில் ரயிலேவே ஸ்டேஷன் பகுதி வீடுகளில் லேசான அதிர்வை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
புவியியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு இதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.