ADDED : ஜூன் 15, 2025 06:57 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி அருகே எலைட் நிறுவனத்தின் மூன்றாவது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. முதன்மை நிர்வாக இயக்குனர் பாலசுந்தர் முன்னிலையில், உரிமையாளர் மாலா திறந்துவைத்தார். உரிமையாளர்கள் வினோத், ேஷாபனா வரவேற்றனர்.
நிர்வாக இயக்குனர் பாலசுந்தர் கூறுகையில், ''திண்டுக்கல்லில் முதல்முறையாக பிர்லா ஒபஸ் பெயிண்ட் கார்னர் ேஷாரூம் திறந்துள்ளோம். அல்ட்ரா சிமென்ட், ராம்கோ சூப்பர் கிரேட், செட்டிநாடு சிமென்ட், டால்மியா, பாரத் ஆகியவைகளும், இரும்புக்கம்பிகளில் ஐஸ்வர்யம், ஜெ.எஸ்.டபிள்யூ., ஷ்யாம், சூர்யதேவ், பிரைட், சுமங்களா, பெயிண்ட்களில் ஏசியன், பிர்லா ஒபஸ் பெயிண்ட்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும். 10 மூடை சிமென்ட் வாங்குபவர்களுக்கு வண்டி வாடகை இலவசம். 50 மூடை வாங்கினால் அளவு டேப், 100 மூடை வாங்கினால் கவர் பிளாக், அளவு டேப், மைக்ரோ பைபர் துணி இலவசமாக வழங்கப்படுகிறது.ஸ்டீல்களில் 50 கிலோ வாங்குபவர்களுக்கு வண்டி வாடகை, கவர் பிளாக், ஒரு டன் வாங்கினால் வண்டி வாடகை, கவர் பிளாக், அளவு டேப், ஒன்றரை டன் வாங்கினால் அளவு டேப், மைக்ரோ பைபர் துணி, கவர் பிளாக் இலவசமாக வழங்குகிறோம். இந்த ஆபரை ஜூன் முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளோம் ''என்றார்.