/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வளர்ச்சிப்பணிகளுக்கு பூமி பூஜை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பங்கேற்பு
/
வளர்ச்சிப்பணிகளுக்கு பூமி பூஜை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பங்கேற்பு
வளர்ச்சிப்பணிகளுக்கு பூமி பூஜை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பங்கேற்பு
வளர்ச்சிப்பணிகளுக்கு பூமி பூஜை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பங்கேற்பு
ADDED : ஜன 14, 2024 04:15 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் குட்டியபட்டி பிரிவு முதல் பிள்ளையார்நத்தம் வரை புதிய சாலை, குள்ளனம்பட்டியில் புதிய போர்வெல்லுடன் தண்ணீர் தொட்டி என்பன உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
பள்ளபட்டி ஊராட்சியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேற்கு ஒன்றிய அ .தி.மு .க., செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அப்துல் ரஹீம் வரவேற்றார். மாநகர எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட நிர்வாகிகள் பாரதிமுருகன், ஜெயராமன், வி.டி.ராஜன், முத்துச்சாமி, ஜெ.எம்.எஸ்.இக்பால், பகுதி செயலாளர்கள் சுப்ரமணி, மோகன், சேசு, ஒன்றிய நிர்வாகிகள் நந்தகோபால், ராஜா, சின்ன கோபால், மனோகரன், வேல்முருகன், சதீஷ், செந்தில், அந்துவான், செந்தில், துரைப்பாண்டி கலந்து கொண்டனர். இது போல் குள்ளனம்பட்டி பெரியார் தண்ணீர் டேங்க் அருகில் ஊர் பொதுமக்கள் ஈமச் சடங்கு செய்வதற்கு ரூ.4லட்சத்து 70ஆயிரம் மதிப்பில் புதிய போர்வெல், தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நடந்தது.
இதையும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

