/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ.,வை அழிக்கும் வரை அ.தி.மு.க., ஓயாது சொல்கிறார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

ADDED : பிப் 02, 2024 01:04 AM
திண்டுக்கல்:''தமிழகத்தில் பா.ஜ.,வை அழிக்கும் வரை அ.தி.மு.க., ஓயாது'' என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ.,வை அழிக்கும் வரை அ.தி.மு.க., ஓயாது. பா.ஜ., ஆதரவு இருந்ததால் தான் 4 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சி நீடித்தது என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறுவதை ஏற்க முடியாது. அ.தி.மு.க., கரைவேட்டியை கூட கட்ட முடியாத நிலையிலுள்ள அவரது கருத்துக்கள் ஒரு பொருட்டல்ல. தேவையான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்ததால் தான் ஆட்சி நீடித்தது. அவரோ, மற்றவர்களோ(பா.ஜ.,) அ.தி.மு.க.,விற்கு ஒன்றும் செய்யவில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க., ஆதரிக்காது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றார்.