/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எரியோட்டில் பாத சேவை மருத்துவ முகாம்
/
எரியோட்டில் பாத சேவை மருத்துவ முகாம்
ADDED : ஜன 24, 2024 06:25 AM
எரியோடு : எரியோட்டில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்காக திருஅருள் பேரவையினர் பாத சேவை மருத்துவ , அன்னதான சேவை முகாம் நடத்தினர்.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட பக்தர்கள் எரியோடு வழியே பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். பக்தர்களில் பலருக்கு கால்வலி, சுளுக்கு, ரத்தக்கட்டு, பாதங்களில் கொப்பளம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 14வது ஆண்டாக எரியோடு நால்ரோடு சந்திப்பில் திருஅருள்பேரவை சார்பில் பாத சேவை மருத்துவ முகாம் நடந்தது. திருஅருள் பேரவை பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் பக்தர்களது கால்களுக்கு மருந்துகளை தடவி பாத சேவை செய்து அன்னதானம் வழங்கினர். ஓய்வு துணை கலெக்டர் சுந்தரகோபால் தலைமை வகித்தார். டாக்டர்கள் பாலச்சந்திரன், ராஜேஷ்குமார் துவக்கி வைத்தனர். ஏற்பாட்டினை எரியோடு திருவருள் பேரவை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் நவநீதபாலகிருஷ்ணன், துணை செயலாளர்கள் பழனிச்சாமி, ராமகிருஷ்ணன் செய்திருந்தனர்.

