ADDED : ஜூலை 05, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வனப் பகுதியில் நரி, கீரிகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பழநி பெத்தாநாயக்கனுாரை சேர்ந்தவர்கள் பாபு 52, காளிதாஸ் 45. இவர்கள் இரவில் நரியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டனர்.
இதேபோல் கோட்டாநத்தத்தை சேர்ந்த சுரேஷ் 46, முத்துச்சாமி 55, இருவரும் வலைகளை விரித்து கீரிகளை வேட்டையாடி வெட்ட வெளியில் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

