/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு ஊழியர்களுக்கான கட்டணம் இல்லா சிகிச்சையை முறைப்படுத்தலாமே: மாதாந்திர பணத்தையும் இழந்து பரிதவிக்கும் அவலம்
/
அரசு ஊழியர்களுக்கான கட்டணம் இல்லா சிகிச்சையை முறைப்படுத்தலாமே: மாதாந்திர பணத்தையும் இழந்து பரிதவிக்கும் அவலம்
அரசு ஊழியர்களுக்கான கட்டணம் இல்லா சிகிச்சையை முறைப்படுத்தலாமே: மாதாந்திர பணத்தையும் இழந்து பரிதவிக்கும் அவலம்
அரசு ஊழியர்களுக்கான கட்டணம் இல்லா சிகிச்சையை முறைப்படுத்தலாமே: மாதாந்திர பணத்தையும் இழந்து பரிதவிக்கும் அவலம்
ADDED : ஜன 23, 2024 05:00 AM

வேடசந்தூர்: அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், கட்டணமில்லா சிகிச்சையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் 10.46 லட்சம் பேர் உள்ளனர். ஓய்வு பெற்றோர்
7.34 லட்சம் பேர் உள்ளனர். அரசு ஊழியர் ,ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணம் இல்லா சிகிச்சை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக அரசு ஊழியர் ,ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.300 , ஓய்வு பெற்றோருக்கு மாதம் ரூ. 495 பிடித்தம் செய்கிறது. அந்த வகையில் 10 லட்சம் பேர் தலா ரூ.300 என்றால் மாதத்திற்கு ரூ. 30 கோடி , ஆண்டுக்க ரூ.360 கோடியும் வசூல் ஆகிறது. இதே 4 ஆண்டுகளுக்கு ரூ. ஆயிரத்து420 கோடி வசூல் நடைபெறுகிறது. இது மட்டுமின்றி ஓய்வு பெற்றவர்கள் கணக்கு தனி. இந்தத் திட்டத்தை தமிழக அரசு யுனைட்டோ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலமாக வழங்கியது .அந்த நிறுவனம் 2 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்து செயல்படுத்துகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.டி., இந்தியா நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு கண்ணுக்கு ரூ.30 ஆயிரம், கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் என மதிப்பீடு செய்துள்ளது. ஆனால் மற்ற எந்த சிகிச்சைகளுக்கும் மதிப்பீடு செய்யவில்லை. திட்டத்தின் கீழ் ஊழியர்கள் 203 நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை பெறலாம். பணமே கட்டாமல் சிகிச்சை பார்ப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். பெயரே கட்டணமில்லா சிகிச்சை தான்.
நிலைமை இவ்வாறு இருக்க, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு சேரும் ஊழியர்களுக்கு பணத்தை கட்டச் சொல்லி மருத்துவமனைகள் நிர்பந்தப்படுத்துவதாக குமுறல் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி உதாரணமாக மருத்துவச் செலவு ரூ. ஒரு லட்சம் வரை ஆகும் நிலையில் ரூ.40 ஆயிரம் மட்டுமே கிளைம் ஆகிறது என்கின்றனர் அரசு ஊழியர்கள் . இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ,ஓய்வு பெற்றோர் மனம் வெதும்பி மருத்துவ செலவுகளை பார்ப்பதாக கூறுகின்றனர். தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறையாக நியாயமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
......
தேவை கட்டணமில்லா சிகிச்சை
அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 1.7.2021 முதல் 30.6.2025 முடிய 4 ஆண்டுகளுக்கு நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ,ஓய்வு பெற்றோர் முறையான கட்டணமில்லா சிகிச்சை பெற முடியவில்லை. செலவு பணம் கிளைம் செய்வதில் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. ஆனால் முறையான சிகிச்சை இல்லை. இதேபோல் இந்தத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல் ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா உள்ளிட்ட அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் குளறுபடிகளுக்கு தீர்வு காண முடியும். கட்டணமில்லா சிகிச்சையை முறைப்படுத்தவும், அதை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் .
பி.பிரடெரிக் ஏங்கல்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர்,சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்.
.............

