/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு பணம் கேட்டு வந்த நெருக்கடியால் விரக்தி

ADDED : ஜூன் 25, 2025 02:07 AM

திண்டுக்கல்:தனியார் நிதி நிறுவனம் மூடப்பட்ட நிலையில் அதில் ஏஜன்ட் ஆக பணிபுரிந்த பெண் , வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் கேட்டு வந்த நெருக்கடியால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இங்கு சமூக நலத்துறை சார்பில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கீதாஜீவன் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பி சென்றுகொண்டிருந்தபோது கார்கள் நிறுத்துமிடத்தில் இருந்து உடலில் தீப்பற்றிய நிலையில் பெண் ஓடி வந்தார். போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.அரசு மருத்துவக்கல்லுாரி துணை பேராசிரியர் லலித் , தீக்காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
தாடிக்கொம்பு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 'தீக்குளித்தவர் நத்தம் மங்கலப்பட்டி அருகே உள்ள சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாள் 40. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பிரபல நிதி நிறுவனத்தில் ஏஜன்ட் ஆக பணியாற்றினார். வாடிக்கையாளர்களிடமிருந்து பல லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து கொடுத்த நிலையில் நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் முதலீடு செய்தவர்கள் பச்சையம்மாளிடம் பணத்தை திரும்பக்கேட்டுள்ளனர். அவருக்கு மிரட்டல் வந்துள்ளது.இதனால் மன விரக்தியில் இருந்தவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.