/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தும்மிச்சம்பட்டி கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு தங்க நாணயம்
/
தும்மிச்சம்பட்டி கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு தங்க நாணயம்
தும்மிச்சம்பட்டி கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு தங்க நாணயம்
தும்மிச்சம்பட்டி கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு தங்க நாணயம்
ADDED : ஜன 19, 2024 05:38 AM

ஒட்டன்சத்திரம்: பொங்கலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியில் நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் டி.ஜி.பி., ரவி தங்க நாணயங்களை பரிசாக வழங்கினர்.
தும்பை நண்பர்களின் இளைஞர் சங்கமம் சார்பில் தும்மிச்சம்பட்டியில் பொங்கல் விழா நடந்தது.
இதனை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதை தொடர்ந்து நடந்த கோலப்போட்டியில் 90 பெண்கள் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு பெற்றவருக்கு அரை பவுன் தங்க நாணயம், 2ம் பரிசு பெற்றவருக்கு கால் பவுன் தங்க நாணயம், 3 ம் பரிசு பெற்றவர்க்கு ஒரு கிராம் தங்க நாணயத்தை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் டி.ஜி.பி., ரவி வழங்கினர். ராஜ்குமார் தலைமை வைத்தார். நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.