/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரிவாளுடன் சுற்றியவர் மீது குண்டாஸ்
/
அரிவாளுடன் சுற்றியவர் மீது குண்டாஸ்
ADDED : செப் 02, 2025 06:20 AM

நத்தம் :  -நத்தம்- அண்ணாநகரை சேர்ந்தவர்   ரபீக்ராஜா 29.இவர் மீது திருட்டு, கொள்ளை, கஞ்சாவிற்பனை,பொது சொத்துகளை சேதப்படுத்துதல், வணிக நிறுவனங்களை சேதப்படுத்தியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.   ஆக. 20-ல்   பஸ் ஸ்டாண்ட் பகுதியில்  அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்தார்.  குட்டூரை சேர்ந்த ராஜாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சென்றார்.
கடைக்காரர்களையும் மிரட்டினர்.  இது தொடர்பான வீடியோ   வைரலானது.  நத்தம்  -  போலீசார்  ரபீக்ராஜாவை கைது செய்தனர்.  இவர் மீது குண்டர் சட்டத்தில்  நடவடிக்கை எடுக்க  எஸ்.பி., பிரதீப்  கலெக்டர் சரவணனிடம் பரிந்துரை செய்ய குண்டர் தடுப்பு சட்டத்தில்  நடவடிக்கை எடுக்க  கலெக்டர் உத்தரவிட்டார்.

