/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உலகம்பட்டியில் ஜல்லிகட்டு காளை முட்டியதில் உரிமையாளர் பலி
/
உலகம்பட்டியில் ஜல்லிகட்டு காளை முட்டியதில் உரிமையாளர் பலி
உலகம்பட்டியில் ஜல்லிகட்டு காளை முட்டியதில் உரிமையாளர் பலி
உலகம்பட்டியில் ஜல்லிகட்டு காளை முட்டியதில் உரிமையாளர் பலி
ADDED : ஜன 22, 2024 11:25 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் நடந்த ஜல்லிகட்டில் 762 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்றனர். காளை முட்டியதில் அதன் உரிமையாளர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 13 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சர்ச்கள் சார்பிலும் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டி பெரிய அந்தோனியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்களுக்கு 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் உடல் பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுமதித்தனர். காளைகளை 27 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர்.
மாடு பிடி வீரர்கள் 25 பேர் கொண்ட குழு வீதம் 18 குழுக்களாக பிரிந்து களம் காண அனுமதிக்கப்பட்டனர். ஆர்.டி.ஒ., கமலக்கண்ணன் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். 16 சுற்றுகளுடன் போட்டி நிறைவு பெற்றது. 762 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 500 வீரர்கள் பங்கேற்றனர். ஏழு மாடுபிடி வீரர்கள், 8 காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 20 பேர் காயமுற்றனர்.
உரிமையாளர் பலி
திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி எஸ்.காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செபஸ்தியார் 27, தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார். வாகனத்திலிருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக செபஸ்தியாரை காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார்.

