/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : ஜன 21, 2024 04:00 AM

திண்டுக்கல்: தை மாத கார்த்திகையை யொட்டி திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம் ,சிறப்பு வழிபாடுகள் நடந்தன .
கார்த்திகை திருநாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டின் முதல் கிருத்திகை நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நத்தம் :-சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் தை மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்ஸவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 21 வகை அபிஷேகம் நடந்தது.
மலர்களால் அலங்காரம் செய்ய வெள்ளிக் கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் பின் லட்சார்ச்சனை, தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷமிட கோயிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். திண்டுக்கல், சாணார்பட்டி,நத்தம், கோபால்பட்டி, செந்துறை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.காமாட்சி மவுனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அறக்காவலர் அழகுலிங்கம் செய்திருந்தார். நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் முருகனுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா பூஜையிலும் திரளான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.
ரெட்டியார்சத்திரம்: கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கப்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
தருமத்துப்பட்டி : அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் திருவாசக முற்றோதல் தேவார பாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.
கசவனம்பட்டி : மவுனகுரு சுவாமி கோயில் சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், கார்த்திகை சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனைகள் நடந்தது.
பழநி : பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.இதோடு திருவிளக்கு பூஜை, தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தங்கரத புறப்பாட்டில் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். திரு ஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது.

