ADDED : பிப் 02, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை 4 வழிச்சாலையில் சிக்காளிப்பட்டி பிரிவு பகுதியில் நேற்றுஇரவு 8:30 மணியளவில் 5 வயதுள்ள ஆண் கடமான் இறந்து கிடந்தது.
வனவர் தர்மராஜ் தலைமையில் வனத்துறையினர் கடமானை ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடமான்கள் வசிக்கின்றன. வழி தவறி வந்து நாய்கள் விரட்டியதால் ரோட்டை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்த மான் இறந்துள்ளது. கடமான் உடல் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இன்று(பிப்.,2) கால்நடை டாக்டர் மூலம் உடல்கூறு ஆய்வு செய்து புதைக்கப்படும்,' என்றனர்.

