/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாகல்நகர் மகாகணபதி கோயில் கும்பாபிஷேகம்
/
நாகல்நகர் மகாகணபதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 02, 2024 12:38 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் வடக்கு சவுராஷ்டிராபுரம் ஸ்ரீமகா கணபதி கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
திண்டுக்கல் நாகல்நகர் வடக்கு சவுராஷ்டிராபுரத்திலுள்ள ஸ்ரீமகாகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷகே விழா ஜன.31ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீமகா கணபதி, கைலாயநாதர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பரிவார மூர்த்திகள் சிறப்பு பூஜையுடன் வேதாந்த தேசிகன் பட்டாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அர்ச்சகர்கள் வெங்கடாஜலபதி ஐயர், சிவக்குமார் ஐயர் முன்னிலை வகித்தனர். விக்னேஸ்வர், புண்யாகவாசனம், பூதசுத்தி, ரக்சா பந்தனம், சூர்ய, துவார தோரண, வேதிகை, வேதபாராயணம், தத்வ பூஜைகள் நியாஸ ஹோமம் வளர்த்து வேதங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் நடத்த பட்டன. சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நாகல்நகர் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்தனர்.

