இப்தார் நோன்பு திறப்பு
நத்தம்: நத்தத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி செயலாளர் பதுருதீன்ஹஜ்ரத் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முகமதுமீரான, ஒன்றிய செயலாளர் சுலைமான்சேட், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், அ.தி.மு.க., ஜெ பேரவை இணை செயலாளர் கண்ணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,நகர செயலாளர் ராஜ்மோகன், காங்கிரஸ் தலைவர் ராஜ் கபூர், பழனியப்பன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் கலந்து கொண்டனர்.
கே.பி.எஸ்., பள்ளி ஆண்டு விழா
திண்டுக்கல் :கே.பி.எஸ்., பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் சின்னதுரை தலைமை வகித்தார். டிரஸ்டி அர்ச்சனா வரவேற்றார். எஸ்.ஐ., பொன்குணசேகரன், எஸ்.எஸ்.ஐ., பூபதி, திண்டுக்கல் தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்க தலைவர் இளம்பாரதி, செயலர் பிரபாகரன், கோவை கே.ஜி., குழும மேலாளர் முகமதுசேக்பரீத், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கோபால்சாமி பேசினர். கிேஷார் நன்றி கூறினார்.
தி.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு
கள்ளிமந்தையம் : தேவத்துாரில் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனைப்படி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்கும் விதமாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் திறந்து வைத்தார்.
உலக காடுகள் தினம்
ரெட்டியார்சத்திரம் : வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ் .வேளாண் கல்லுாரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் கொத்தப்புள்ளி கே.புதுக்கோட்டை பாரதி இந்து உதவிபெறும் ஆரம்ப பள்ளியில் உலக காடுகள் தின விழா நடந்தது. மாணவியர் அமிர்தா, அருணா, அஸ்மின் சோபியா, அஸ்வினி, அஸ்வதிப்பிரியா, பாரதி பிரியா, புவனேஸ்வரி, தானியா ஆலோசனை வழங்கினர். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கம்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஆதவன் உலக செம்மொழி தமிழ் சங்கம் சார்பில் சீலப்பாடி ஆதவன் பயிற்சி மினி அரங்கத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மெர்சி செந்தில்குமார் தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர் ஜோதி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் குணவதி நன்றி கூறினார்.
இலவச ஆன்மிக பயணம்
திண்டுக்கல் : திண்டுக்கல் , தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் 20 பேர் ராமேஸ்வரத்திலிருந்துகாசி விஸ்வநாதர் சுவாமி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்து அங்கு தீர்த்தம் எடுத்து காசி சென்று அபிஷேகம் செய்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். நே்று தொடங்கிய ஆன்மிக பயணம் ஏப்ரல் 2ம் தேதி நிறைவடைகிறது. 9 நாள் பயணத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய மஞ்சள் பை வழங்கப்பட்டது.--