/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செய்தி சில வரிகளில் ஓய்வூதியர் சங்க கூட்டம்
/
செய்தி சில வரிகளில் ஓய்வூதியர் சங்க கூட்டம்
ADDED : ஜன 24, 2024 06:23 AM
ஓய்வூதியர் சங்க கூட்டம்
சாணார்பட்டி :திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்த பொதுக்குழு கூட்டம் டி.என்.ஜி.ஓ., கட்டட அரங்கில் நடந்தது. மாவட்டதலைவர் தங்கப்பன், மாநில துணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி,ஜெகராஜன், சுப்ரமணியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், துணைத் தலைவர்கள் சின்னக்காளை, கந்தசாமி, பிரசார அணி செயலாளர் பெருமாள், மாவட்ட இணை செயலாளர் நாராயணசாமி பங்கேற்றனர். பொருளாளர் தங்க வடிவேல் நன்றி கூறினார்.
எஜமானனை காப்பாற்ற முயன்ற நாய்
கோபால்பட்டி : கோபால்பட்டி வேம்பார்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி நகருதீன். இவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்க்கிறார். நாய் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்தது. நத்தம் தீயணைப்பு நிலையஅலுவலர் லட்சுமணன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் நாயை மீட்க முயன்றபோது 6 அடி கருநாகம் சீறியது. பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. பாம்பு தண்ணீர் தொட்டியில் இருந்ததை பார்த்த நாய் தன் எஜமானுக்கு தெரியப்படுத்த தண்ணீர் தொட்டியில் குதித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
போதைக்கு எதிராக ஊர்வலம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மதுவிலக்கு போலீசார் சார்பில் போதைப் பொருட்களை பயன்படுத்துதலுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலம் தலைமை தபால் நிலையம்,பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட் வழியாக மீண்டும் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முடிந்தது. ஆர்.டி.ஓ.,கமலக்கண்ணன், தாசில்தார் அசோகன்,டி.எஸ்.பி.,சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா, எஸ்.ஐ.,முத்துக்குமார் பங்கேற்றனர்.
கல்லுாரி களப்பயணம்
திண்டுக்கல் :நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான உடற்கல்வி வழிகாட்டல் கல்லுாரி களப்பயணம் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டத்துடன் இணைந்து நடந்தது. முதல்வர் நாகநந்தினி தலைமை வகித்தார். களப்பயணத்தில் மாணவியர்களிடமிருந்து மின்னுாட்டம் பெறப்பட்டது.
குடிநீர் இணைப்பு கட்
திண்டுக்கல் :திண்டுக்கல் பாரதிபுரம்,சீனீ ராவுத்தர் சந்து,கொல்லன்பட்டரை சந்து,மேட்டுப்பட்டி,கோவிந்தாபுரம்,ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் குடிநீர் வரி செலுத்தவில்லை. வரி செலுத்தாதோர் இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய் அலுவலர்கள் வரிசெலுத்தாத 8 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

