ADDED : ஜன 21, 2024 03:55 AM
திண்டுக்கல்: சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்க வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் சத்துணவு ஊழியர்களால் செயல்படுத்த வேண்டும். அரசு துறையில் காலி பணியிடங்களில் சத்துணவு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,திண்டுக்கல் மாவட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் குமரம்மாள் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர்கள் நாராயணசாமி, ராசு, இணை செயலாளர்கள் தமிழரசன், பெருமாள் பங்கேற்றனர். ரெட்டியார்சத்திரம், ஆத்துார், வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்துார், நத்தம், சாணார்பட்டி, நிலக்கோட்டை, கொடைக்கானல், பழநி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழநி: பழநி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

