/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பால் நித்தம் நித்தம் மக்கள் அவதி
/
ஆக்கிரமிப்பால் நித்தம் நித்தம் மக்கள் அவதி
ADDED : ஜன 10, 2024 06:51 AM

இடையூறாக உள்ளது
எரியோடு திண்டுக்கல் ரோட்டில் கொடிக்கால்பட்டியில் பயணியர் நிழற்குடையில் மாற்றுதிறனாளிகளுக்காக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அகலம் இல்லாத நிலையில் சாக்கடை கட்டமைப்பும் இடையூறாக உள்ளது. -ரமேஷ், எரியோடு.
.............----------
ரோடு பள்ளத்தால் பாதிப்பு
வேடசந்துஆர் அருகே பாலப்பட்டியில் இருந்து பெருமாள்நாயக்கனுார் செல்லும் ரோட்டில் வாணிக்கரை பிரிவு அருகே பள்ளம் தோண்டிய நிலையில் மூடப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது .பள்ளத்தை மூட வேண்டும் ஆர்.கனகராஜ், வேடசந்துார்.
...........----------மழை பெய்தாலே சகதி
கொடைக்கானல் ஊராட்சி கே.சி.பட்டி உராட்சி கள்ளக்கிணறு செல்லும் ரோட்டில் சாரல் மழை பெய்தாலே சகதியாக மாறி போக்குவரத்து பயனற்று உள்ளது. விவசாயிகள் பொருட்களை கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். ரோடு அமைக்க வேண்டும். முருகன் ,கே.சி. பட்டி.
............----------ஆக்கிரமிப்பால் அவதி
நத்தம் - திண்டுக்கல் ரோடு சாணார்பட்டியில் பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நடைமேடையை ஆக்கிரமித்து பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர் .இதனால் பக்தர்கள் ரோட்டில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது .ம. தாமஸ்ராஜ், சாணார்பட்டி.
...........-----------குடிநீர் குழாய் சேதம்
பழநி அருகே ஆண்டிபட்டி ஊராட்சி லட்சுமாபுரத்தில் குடிநீர் தொட்டி குழாய் சேதம் அடைந்த தண்ணீர் வீணாக செல்கிறது .தினந்தோறும் வீணாகுவதால் மக்கள் பயன்படுத்த முடியாது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . குழாய்களை சரி செய்ய வேண்டும் .செல்வராஜ், லட்சுமாபுரம்.
................------------
தீயால் அச்சுறுத்தல்
திண்டுக்கல் அனுமந்த நகரின் மூன்றாவது தெருவின் கடைசியில் குடிநீர் தொட்டி அருகில் 15 நாட்களாக குப்பை அள்ளபடாமல் தீ வைத்து எரிக்கின்றனர் .இதனால் புகை மண்டலத்துடன் மூச்சு திணல் ஏற்படுகிறது. குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ரியாஸ், அனுமந்தநகர்.
............------------போக்குவரத்துக்கு இடையூறு
பழநி 26வது வார்டு பாரதிதாசன் ரோட்டில் ஆக்கிரமிப்பு ஏராளமாக இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது .சிலர் பாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனர். இதனால் பலரும் பாதிக்கும் நிலை தொடர்கிறது . ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சரவணன், பழநி.
..........------------

