பணம் கேட்டவருக்கு வெட்டு
நத்தம்: -நத்தம் அருகே சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னர் 41. அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் 23,க்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்து வந்தது. இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முத்துக்குமார் அரிவாளால் பொன்னரை வெட்டினார். காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.
மது விற்ற இருவர் கைது
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு எஸ்.ஐ., பிரபாகரன், எஸ்.எஸ்.ஐ., அழகர்சாமி, முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோர் ரோந்து சென்றனர்.செட்டிநாயக்கன்பட்டி அனில் சேமியா கம்பெனி அருகே சென்றபோது மது விற்ற திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த அருண் பிரசாத் 36, திண்டுக்கல் ஓடைப்பட்டி பிரிவு அருகே மது விற்ற செல்லமந்தாடி மணிராஜையும் 36, கைது செய்தனர்.
மீன் பிடித்த இளைஞர் பலி
சாணார்பட்டி: வேம்பார்பட்டி குரும்பபட்டியை சேர்ந்தவர் வீரபாண்டி 35. நேற்று விளக்கு ரோடு அருகே உள்ள மந்தை குளத்தில் வலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதமாக குளத்தில் தவறி விழுந்து இறந்தார். நத்தம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.
டூவீலர்கள் மோதி பலி
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி கூட்டுறவு சொசைட்டி அருகே கொழுமம் சாலையை நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 52, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கடக்க முயன்றார். எதிரே வந்த டூவீலரில் மோதியதில் பலத்த காயமடைந்தார். பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தகராறில் 6 பேர் காயம்
வடமதுரை : அய்யலுார் குப்பாம்பட்டி பட்டவர்சுவாமி கோயிலில் குல தெய்வ வழிபாடு தொடர்பாக இரு தரப்பாக பிரிந்து செயல்படுகின்றனர். நேற்றுமுன்தினம் ஒரு தரப்பு பொங்கல் வைத்து வழிபட சென்ற நிலையில் மற்றொரு தரப்பு கோயில் இடம் எங்களுடையது எனக்கூற கோஷ்டி மோதலானது.
இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் காயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குப்பாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் 34, மணிகண்டன் 33, ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர். ஆறு பேரை தேடுகின்றனர்.
தொழிலாளி தற்கொலை
வடமதுரை : தென்னம்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி மஞ்சநாதன் 43. 8 மாதங்களுக்கு முன் இவரது மகன் இறந்த நிலையில் மன உளைச்சலுடன் இருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதுவுடன் விஷம் குடித்து இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் கவிழ்ந்து காயம்
எரியோடு: திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்தவர் அப்பாஸ் 37. இவரது காரில் அதே பகுதியை சேர்ந்த மருதை, அவரது மனைவி கண்ணகி, ஈஸ்வரி உட்பட 5 பேர் பாளையம் சென்றனர். கோவிலுார் பண்ணைக்குளம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காயமடைந்த 5 பேரும் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அமைதிக்கு இடையூறு; கைது
வேடசந்துார்:வேடசந்துார் தலைமை காவலர் முத்துராமன், முதல் நிலை காவலர் கருணாகரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது,கீழ் மாத்திணிபட்டி பஸ் ஸ்டாப் பின்புறம் எரியோட்டை சேர்ந்த ஆனந்தன் 40, கணேசன் 42, ஆகியோர் மது போதையில் போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். இருவரையும் எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.
இருவர் கைது
ஆயக்குடி: பழநி பழைய ஆயக்குடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் 26.இவருக்கும் ஆயக்குடி கொய்யா மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வெங்கடாசலம் 37, இடையே முன் விரோதம் இருந்தது.
நேற்று வெங்கடாசலம், அவரது 17 வயது மகன் இருவரும் வெங்கடேஸ்வரனிடம் தகராறு செய்து பிளேட்டால் முதுகில் காயம் ஏற்படுத்தினர். ஆயக்குடி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

