ரயில் பயணி பலி
திண்டுக்கல்: மதுரை நரிமேட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் 80. மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை ரயிலில் பயணித்தார். நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இறக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் மருத்துவமனை கொண்டு செல்ல முயன்றபோது இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி பெண் பலி
கள்ளிமந்தையம்: பொருளுரைச் சேர்ந்தவர் ஈஸ்வரி 50. நேற்று காலை கள்ளிமந்தையம் தொப்பம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் வந்த கார் மோதி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
படம் எடுத்தவர் கைது
எரியோடு : தொட்டணம்பட்டி பொம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்களை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் 24,அலைபேசியில் படம் எடுத்ததார். இதன் காரணமாக கிராமத்தில் இரு தரப்பு மோதலாக மாறியது. இரு வழக்குகள் பதிந்த நிலையில், விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
திருமணம் நிறுத்தம்
வடமதுரை : அய்யலுார் புத்துார் பிச்சம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடானது. சமூக நலத்துறைக்கு அப்பகுதியினர் புகார் செய்தனர். விசாரித்த அதிகாரிகள் 18 வயது பூர்த்தியான பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோரிடம் உறுதிமொழி பெற்று அனுப்பி வைத்தனர்.
நால்வர் மீது வழக்கு
தாடிக்கொம்பு : பெரியமல்லனம்பட்டியை சேர்ந்த டிரைவர் பெத்திராஜ் 27. இவர் மழை நீர் வீட்டு வாசலில் தேங்கியதால் அகற்றினார். மழை நீர் அருகிலுள்ள வேலு வீட்டின் முன் சென்றபோது ஆத்திரமடைந்த வேலு,அவரது மனைவி பட்டாலு, மகன்கள் தங்கவேல், பெருமாள் ஆகியோர் பெத்திராஜை தாக்கினார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் அடிப்பட்டு பலி
சாமிநாதபுரம் : பழநி அருகே புஷ்பத்தூர் பகுதி ரயில் பாதையில் நேற்று முன்தினம் இரவு மல்லய கவுண்டம்பட்டி சேர்ந்த பழநிச்சாமி 53, திருச்செந்தூர்-பாலக்காடு ரயிலில் அடிபட்டு இறந்தார் .பழநி ரயில்வே எஸ்.ஐ. பொன்னுச்சாமி தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

