ADDED : ஜன 24, 2024 05:21 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பாக நடுநிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளி 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான திருக்குறள் திருவிழா நிகழ்ச்சி உலக திருக்குறள் பேரவை தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடந்தது.
பேரவை செயலாளர் லாசர் வேளாங்கண்ணி வரவேற்றார். மாவட்ட கல்வி அலவலர் அமுதா, வட்டார கல்வி அலுவலர் மகேஷ்வரி, தலைமை ஆசிரியை பரமேஷ்வரி முன்னிலை வகித்தனர். தமிழ் சங்க செயலாளர் கோபால், பட்டிமன்ற பேச்சாளர்கள் குயிலன், சுரதா, அனந்தராமன், துணைத் தலைவர் அழகர்சாமி பேசினர். இணை செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் லலிதா சரோஜினி ஏற்பாடு செய்தனர். கம்பன் கழக செயலாளர் ராமசாமி நன்றி கூறினார். 20க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 133 மாணவர்கள் பங்கேற்றனர். திருக்குறள் சார்ந்து பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

