நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : தாமரைப்பாடியில் இண்டியா நம்பர் ஒன் நிறுவன ஏ.டி.எம்., இயந்திரம் உள்ளது.
இதில் ரூ.1.80 லட்சம் பணம் இருந்த நிலையில் டிச.29 அதிகாலை 3:00 மணிக்கு அங்கு வந்த நபர் கண்காணிப்பு காமிராக்களை திசை மாற்றியும் , துணியால் சுற்றி இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆட்கள் நடமாட்டம் ஏற்பட்டதால் தப்பினார். வடமதுரை போலீசார் விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒத்தப்பட்டியை சேர்ந்த கோபிநாத் பிரபு 26, என்பது தெரிந்து அவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஏ.டி.எம்.,களில் நடந்த கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

