ADDED : ஜன 19, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக கல்லுாரியில் தேசிய இளைஞர் தின சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் மருதுக்கண்ணன், கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் பாபிநாத் தலைமை வகித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி, நலப்பணித்திட்ட அலுவலர்கள் சிவக்குமார், கார்த்திகா,சுந்தரராஜன் அவர்களும் கலந்து கொண்டனர். கல்லுாரி நிர்வாகத்தின் சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு அடையாள அட்டை சீருடைகள் வழங்கப்பட்டது.

