/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தபால் ஓட்டுகளால் முதல்வரான ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
/
தபால் ஓட்டுகளால் முதல்வரான ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
தபால் ஓட்டுகளால் முதல்வரான ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
தபால் ஓட்டுகளால் முதல்வரான ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
ADDED : பிப் 02, 2024 12:30 AM

திண்டுக்கல்: '' சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளால் தான் ஸ்டாலின் முதல்வரானார்,'' என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி தாக்குதல் நடத்திய தி.மு.க., எம்.எல்.ஏ., உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது :
பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை தி.மு.க., எம்.எல்.ஏ., உறவினர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு நீதி கிடைக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை பின்னரே கைது செய்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போனதற்கு இதுவே ஓர் உதாரணம்.
தி.மு.க., வைச் சேர்ந்த ராசா மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றி இழிவாக பேசியுள்ளார். இந்த கூட்டத்தின் வாயிலாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். தி.மு.க., எனும் தீய சக்தியை அழிப்பதற்காகவே அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர் .உருவாக்கினார். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுகளால் தான் ஸ்டாலின் முதல்வரானார். 2026ல் பழனிச்சாமி முதல்வர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றார்.
முன்னாள் மேயர்மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், பழனிச்சாமி, நடராஜன்,மாவட்ட நிர்வாகிகள் சங்கரநாராயணன் ,பழனிவேல், நாகராணி, திராவிடன ராணி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன்,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதிச் செயலாளர்கள் மோகன், யேசு, சுப்ரமணி, முரளி, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், இணைச் செயலாளர் ராஜன், மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி, சார்புஅணி செயலாளர்கள் ரவிக்குமார், மீனாட்சி சுந்தரம், முன்னாள் கவுன்சிலர் வீரமார்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

