/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது தற்காலிக கழிப்பறைகள்
/
மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது தற்காலிக கழிப்பறைகள்
ADDED : ஜன 21, 2024 03:58 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மக்களின் சுகாதார பயன்பாட்டிற்காக தற்காலிக கழிப்பறை அவசியமாகிறது என்ற தினமலர் செய்தி எதிரொலியால் நகரும் தற்காலிக கழிப்பறைகள் திண்டுக்கல்லில் நான்கு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல இடங்களில் மக்கள் வேறு வழியின்றி திறந்த வெளி கழிப்பறைகளை உபயோகிப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது என தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையொட்டி மாநகராட்சி கமிஷனர் ரவிசந்திரன் உத்தரவின்பேரில் நத்தம் ரோடு, முத்துச்சாமி குளம், நாகல்நகர், பழநி ரோடு ஆகிய இடங்களில் ஒவ்வொன்று வீதம் நான்கு தற்காலிக கழிப்பறைகள் வைக்க பட்டுள்ளது. பழநி செல்லும் பெண்கள் பாதயாத்திரை குழு பக்தர்களுக்கு இந்த நகரும் கழிப்பறையின் உபயோகம் பெருமளவு உள்ளதால் மகிழ்வடைந்து உள்ளனர்.
தொடர்ந்து மக்கள் நெருக்கடியான இடங்களில் இத்தகைய கழிப்பறைகள் அமைத்து நகரின் துாய்மை காக்கப்பட வேண்டும். அதேபோல் இந்த கழிப்பறைகளில் துாய்மை பணியும் அன்றாடம் நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

