/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் தைப்பூசம் திருவிழா இன்று கொடியேற்றம் ஜன.24ல் திருக்கல்யாணம்

ADDED : ஜன 19, 2024 02:21 AM
பழநி:பழநி முருகன் கோயில் தைப்பூசத் திரு விழா இன்று பெரிய நாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜன.24ல் திருக்கல்யாணம், ஜன.25ல் தேரோட்டமும் நடக்கிறது.
இதையொட்டி பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி கோயிலில் உள்ள கொடிகட்டி மண்டபத்தில் இன்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் வள்ளி -தெய்வானை முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி ரதவீதி உலா வருவர். விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
ஆறாம் நாளான ஜன.24 இரவு 7:00 மணிக்கு வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம், இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.
ஏழாம் நாளான ஜன. 25 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், ஜன.28ல் இரவு 7:00 மணிக்கு தெப்பத்தேரோட்டம் நடக்கிறது. அன்றிரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.