ADDED : ஜன 26, 2024 05:53 AM

நத்தம்: நத்தம் அரசு திருமண மண்டபத்தில் சமூகநலன்,மகளிர் உரிமை துறை திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் விஜயசந்திரிகா, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். திண்டுக்கல் எம்,பி., வேலுச்சாமி கலந்து 85 பயனாளிகளுக்கு நிதிஉதவியுடன் தலா 8 கிராம் தங்கம் வழங்கி பேசினார். வட்டார சமூக நல அலுவலர் தனம், தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, நகர அவைத் தலைவர் சரவணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் ராஜகோபால்,மாவட்ட பிரதிநிதி குடகிப்பட்டி அழகர்சாமி கலந்து கொண்டனர். இதேபோல் சாணார்பட்டியிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

