/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பல்லாநத்தம் காலனி மக்களுக்கு பெயர் மாறி பட்டா நா ளை போராட்டம்
/
பல்லாநத்தம் காலனி மக்களுக்கு பெயர் மாறி பட்டா நா ளை போராட்டம்
பல்லாநத்தம் காலனி மக்களுக்கு பெயர் மாறி பட்டா நா ளை போராட்டம்
பல்லாநத்தம் காலனி மக்களுக்கு பெயர் மாறி பட்டா நா ளை போராட்டம்
ADDED : பிப் 12, 2024 05:39 AM
குஜிலியம்பாறை: பல்லாநத்தம் காலனியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 64 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் இந்த வீடுகளுக்கான வீட்டுமனை பட்டா மாறி உள்ளது. இது தொடர்பாக மக்களை உதாசீனம் படுத்திய தாசில்தாரை கண்டித்து நாளை (பிப்.13) போராட்டம் செய்ய உள்ளதாக மார்க்சிஸ்ட் ஒன்றியசெயலாளர் அறிவித்துள்ளார்.
பல்லாநத்தம் ஏ. டி., காலனி மக்களுக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் தனியார் நிலத்தை நிலத்தை வாங்கினர். நிலத்தை முறைப்படி அரசுக்கு ஒப்படைப்பு செய்து அதன் பிறகு இலவச பட்டாக்களை வாங்கி தொகுப்பு வீடுகளையும் பெற்றனர். வரிசைப்படி 64 வீடுகளுக்கான பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் பட்டாவுக்கான நிலத்தை ஒதுக்கி தராததால் அவரவர் விருப்பப்பட்ட இடத்தில் தலா 3 சென்ட் நிலத்தில் இலவச தொகுப்பு வீடுகளை கட்டிக் கொண்டனர்.
தற்போது அந்த வீடுகளில் மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகின்றனர். வீடு லோன் கேட்க சென்ற போது தான் வீடுகளுக்கான வீட்டுமனை பட்டா மாறி உள்ளது தெரியவந்துள்ளது.
வி.சுப்பிரமணி, தி.மு.க., கிளைச் செயலாளர், பல்லாநத்தம்: அந்தக் காலத்திலேயே ஒரு வீட்டுக்கு ரூ. 700 செலுத்தி தனியாரிடம் நிலத்தை வாங்கி அதை அரசுக்கு எழுதிக் கொடுத்து, அதன் பிறகு தொகுப்பு வீடுகளை பெற்றோம். வீடுகள் வந்தவுடன் அவரவர் விருப்பத்திற்கு இடத்தை பிடித்து வீடுகளை கட்டி விட்டோம். வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு பெற்று விட்டோம். ஆனால் தற்போது தான் அனைவரது வீட்டுமனை பட்டாக்களும் மாறி உள்ளது தெரிய வந்தது. குஜிலியம்பாறை தாலுகா அதிகாரிகள் காலனி மக்களின் வீடுகள் உள்ள இடங்களில் வீட்டு உரிமையாளர் பெயரிலே வீட்டு மனை பட்டாவை வழங்க வேண்டும் என்றார்.
ஏ.ராஜரத்தினம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை :
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுடன் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை சந்தித்தோம். நாங்கள் கொடுத்த மனுவை அவர் கையில் வாங்கவில்லை.
அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்லுங்கள் என்றார். அதேபோல் போட்டு விட்டு வந்தோம்.
பட்டா பெயர் மாற்றம் வேண்டுமாயின் ஒரு பட்டாவுக்கு ரூ. 800 செலவாகும் என கேட்கின்றனர். தற்போதைய வறட்சியான சூழ்நிலையில் ரூ. 800 கொடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய பொது மக்களால் முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வீட்டுமனை பட்டாவை வீட்டு உரிமையாளர்களின் பெயரில் முறைப்படி மாற்றி வழங்க வேண்டும். தாசில்தாரின் செயல்பாட்டை கண்டித்து பிப்.13 ல் குஜிலியம்பாறை கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

