/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கல் திருநாளை திருவிழா போல் நடத்திய கல்விக்குழுமம்
/
பொங்கல் திருநாளை திருவிழா போல் நடத்திய கல்விக்குழுமம்
பொங்கல் திருநாளை திருவிழா போல் நடத்திய கல்விக்குழுமம்
பொங்கல் திருநாளை திருவிழா போல் நடத்திய கல்விக்குழுமம்
ADDED : ஜன 21, 2024 04:01 AM

த ிண்டுக்கல்
தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர். அவற்றில் மிகவும் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள் .இப்பண்டிகை தமிழ் கலாசாரத்தை உலகிற்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர். பெரும்பாலும், பள்ளி, கல்லுாரிகளில் தனித்தனியாக நடப்பதை பார்த்திருப்போம். ஆனால் எல்.கே.ஜி., தொடங்கி எம்.எட்., வரை மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்களும் ஒன்றிணைந்து கொண்டாடினர் என்றால் வியப்பிற்குரிய விஷயம் தானே. அந்த பொங்கல் விழா திண்டுக்கல் தாடிகொம்பு ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி மைதானத்தில் ஒரு திருவிழாவைப் போல் கொண்டாடப்பட்டது. அக் ஷயா மெட்ரிக் பள்ளி, கே.நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி, ஓம் சாந்தி பள்ளி இணைந்து இந்த விழாவினை கொண்டாடினர். விழாவில் பங்கேற்றோர் பகிர்ந்து கொண்டவை...
மகிழ்ச்சி அளிக்கிறது.
பழனிச்சாமி, தாளாளர், அக் ஷயா கல்வி குழுமம் : மாணவர், ஆசிரியர், பெற்றோர் என 3 தரப்பினரையும் ஒன்றிணைத்து பொங்கல் விழா நடந்தது. எல்.கே.ஜி., முதல் எம்.எட் .,வரை உள்ள எங்கள் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரே இடத்தில் தமிழர் பண்பாட்டை வெளிகாட்டும் வகையில், அனைவரும் பங்கேற்கும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. எங்களது அம்மா இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று அவர்களை அங்கீகரித்து மகிழ்ச்சியடையச் செய்தது. மாணவர்களிடையே குழு மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது இந்த விழா. ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் அமர்ந்து காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் பொங்கலை ஆனந்தத்துடன் கொண்டாட வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
திறன்களை காட்ட வழிகாட்டிய திருவிழா
கோபால், முதல்வர், கே.நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி : தமிழர் பண்பாட்டின் சிறப்பை உணர்த்தும் வகையில் சமத்துவம், கலாசாரம், ஒற்றுமை உணர்வு, சமுதாய வாழ்க்கையை பி.எட்., எம்.எட்., படிக்கும் ஆசிரிய மாணவர்களுக்கு கற்றுத் தரும் வகையில் இந்த விழாவினை நடத்தினோம். உறியடி, கோலப்போட்டி, பொங்கல் வழிபாடு என ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்க வைத்தோம். கலாசார திருவிழாகவாக மாற்றி மாணவர்கள் தங்களது பல்வேறு தனித்திறன்களை காட்ட இவ்விழா வழிகாட்டியது.
தொடர் பயிற்சி அளிக்கிறோம்
நான்சி புளோரிடா, முதல்வர், ஓம்சாந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி : எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 500 க்கு அதிகமான மாணவர்களை ரங்கோலி, காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்து, அவர்களது தனித்திறனை பெற்றோர் பார்க்கும் வகையில் விழாவை நடத்தினோம். இது பெற்றோர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியது. தற்போதைய காலகட்டத்திலும் இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தமிழ்பண்பாட்டு கலையை மாணவர்கள் இளம் வயதிலே அறியவும், அவர்களும் தங்களை ஏதாவது ஒரு கலையில் ஈடுபடுத்தவும் நாங்கள் தொடர்ந்து பயிற்சி தருகிறோம்.
புத்தகக் கல்வியோடு பண்பாட்டு கல்வி
வேணுகோபால், முதல்வர், அக் ஷயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி : பொதுவாக ஒரு விழா என்றால் பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் பங்கற்பர். இங்கு எல்.கே.ஜி., முதல் கல்லுாரி முதுகலை வரையிலான மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான உறியடி, கோலப்போட்டி, பரதநாட்டியம், இசை என பல பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்கச் செய்தோம். சிறுவர்களுக்கான மினி மாரத்தான் போட்டியையும் நடத்தியதில் அவர்கள் சந்தோஷமடைந்தனர். பள்ளி மாணவர்களுக்கு புத்தகக்கல்வி மட்டுமின்றி பண்பாட்டு கல்வியையும் கற்றுத் தருவதில் இந்த விழா முக்கியமாக அமைந்தது.
கண்களுக்கு விருந்தாக...
யுவராணி, மாணவி, கே.நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி : தமிழரின் பாரம்பரிய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோருமே பங்கேற்ற சமத்துவ பொங்கலை கொண்டாடினோம். வண்ணமயமான கோலங்கள் இடம்பெற்றன. குறிப்பாக விவசாயிகள், உழவர்களை சிறப்பிக்கும் வகையில் அந்த கோலங்கள் இருந்தன. கயிறு இழுத்தல் தொடங்கி உறியடி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நாட்டுப்புற நடமான கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. மறக்க முடியாத நினைவாக இந்த பொங்கல் நிகழ்ச்சி இருந்தது.
விழாக்கோலம் பூண்ட மைதானம்
விவேக்,மாணவர், கே. நஞ்சப்ப கவுண்டர் கல்லுாரி : சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு பாரம்பரியமிக்க விழா இந்த பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவரும் ஒன்றாக எந்த பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினோம் . இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம்.1000 க்கு மேற்பட்ட மாணவர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பாரம்பரிய உடையில் திரண்டிருந்ததால், பள்ளி மைதானமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

