/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாடு மீது மோதியதால் ரயில்கள் தாமதம்
/
மாடு மீது மோதியதால் ரயில்கள் தாமதம்
ADDED : ஜன 24, 2024 01:53 AM
பழநி:பழநி ரயில் தண்டவாளத்தில் திரிந்த மாடு மீது ரயில் மோதியதால் சென்னை ரயில் 27 நிமிடம், அமிர்தா எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாக சென்றது.
பழநி மார்க்கமாக பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது நேற்று மாலை 6:00 மணிக்கு பழநி வந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது. மாலை 6:05 மணிக்கு கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது. இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் மாட்டின் உடலை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கிருந்து 27 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதே வழியில் வர இருந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் சத்திரப்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

