/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உலகம்பட்டி ஜல்லிக்கட்டு: காளை உரிமையாளர் பலி
/
உலகம்பட்டி ஜல்லிக்கட்டு: காளை உரிமையாளர் பலி
ADDED : ஜன 23, 2024 12:52 AM
உலகம்பட்டி : திண்டுக்கல் மாவட்டம், உலகம்பட்டி பெரிய அந்தோனியார் சர்ச்சில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. மாடு பிடி வீரர்கள், 25 பேர் கொண்ட குழு வீதம், 18 குழுக்களாக பிரிந்து களம் இறக்கப்பட்டனர்.
ஆர்.டி.ஒ., கமலக்கண்ணன் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். 16 சுற்றுகளுடன் போட்டி நிறைவு பெற்றது. 762 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 500 வீரர்கள் பங்கேற்றனர். 20 பேர் காயமுற்றனர்.
திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி எஸ்.காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செபஸ்தியார், 27, என்பவர் தன் காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார். வாகனத்திலிருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக செபஸ்தியாரை காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார்.

