/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீவல்சரகு அருகே கட்டுப்பாடற்ற மது விற்பனை * கதம்ப வண்டு, விஷப்பூச்சி தாக்குதலால் 'குடிமகன்'கள் பாதிப்பு
/
சீவல்சரகு அருகே கட்டுப்பாடற்ற மது விற்பனை * கதம்ப வண்டு, விஷப்பூச்சி தாக்குதலால் 'குடிமகன்'கள் பாதிப்பு
சீவல்சரகு அருகே கட்டுப்பாடற்ற மது விற்பனை * கதம்ப வண்டு, விஷப்பூச்சி தாக்குதலால் 'குடிமகன்'கள் பாதிப்பு
சீவல்சரகு அருகே கட்டுப்பாடற்ற மது விற்பனை * கதம்ப வண்டு, விஷப்பூச்சி தாக்குதலால் 'குடிமகன்'கள் பாதிப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:05 AM
செம்பட்டி : சீவல்சரகு அருகே புதுக்கோடாங்கிபட்டி, கோழிப்பண்ணை பகுதியில் கட்டுப்பாடற்ற மது விற்பனையால், மது பிரியர்கள் விபத்துக்குள்ளாவதுடன், இவ்வழியே செல்வோர் முகம் சுளிக்கும் அவலம் தொடர்கிறது.
செம்பட்டி அருகே கோழிப்பண்ணை விலக்கு, புதுக்கோடாங்கிபட்டி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல், -ஆத்தூர் மற்றும் செம்பட்டி-பழநி ஆகிய ரோடுகளின் சந்திப்பு பகுதியாக உள்ள சூழலில் ஏராளமான வாகன ஓட்டிகள் இப்பகுதியை எந்த நேரமும் சூழ்ந்துள்ளனர். கோழிப்பண்ணை விலக்கு நால்ரோடு முதல் சீவல்சரகு ரோடு சந்திப்பு வரையான பகுதியில் மது பிரியர்களின் நடமாட்டம் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கணிசமான அளவில் உள்ளது.
டாஸ்மாக், பார் விற்பனை நேரம் தவிர பிற நேரங்களிலும் அனுமதியற்ற விற்பனை தாராளமாக இப்பகுதியில் தொடர்கிறது. மது பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் மெயின் ரோட்டை திறந்த வெளிபாராக பயன்படுத்துகின்றனர். தென்னந்தோப்புகளிலும் முகாமிடுகின்றனர்.
இப்பகுதியில் கதம்ப வண்டுகள், தேள் மற்றும் பாம்பு கடி பாதிப்பிற்கு உள்ளாகும் 'குடி'மகன்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெயின் ரோடு மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் பாட்டில்களை உடைத்து சிதற விட்டுள்ள சம்பந்தப்பட்ட நபர்களின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீவல்சரகு ஊராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில், பாட்டில்களை உடைத்துச் செல்கின்றனர். அவ்வப்போது இங்குள்ள குப்பை குவியலுக்கு தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தடத்தில் இருசக்கர வாகனங்களில் கடந்து செல்வோர் மட்டுமின்றி பாதசாரிகளும் முகம் சுளிக்கும் அவல நிலை நீடிக்கிறது. மதுவிலக்கு, உள்ளூர் போலீசாருக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். விஷ பூச்சிகளின் தாக்குதலால் மது பிரியர்கள் பலியாகும் முன், இப்பிரச்னையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.