/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரலாறு காணாத வகையில் சின்ன வெங்காய வரத்து கிலோ ரூ.30 க்கு விற்பனை
/
வரலாறு காணாத வகையில் சின்ன வெங்காய வரத்து கிலோ ரூ.30 க்கு விற்பனை
வரலாறு காணாத வகையில் சின்ன வெங்காய வரத்து கிலோ ரூ.30 க்கு விற்பனை
வரலாறு காணாத வகையில் சின்ன வெங்காய வரத்து கிலோ ரூ.30 க்கு விற்பனை
ADDED : ஜன 24, 2024 05:18 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 450 டன் அளவிற்கு சின்னவெங்காயம் வரத்துள்ளதால் ரூ. 30 க்கு விற்பனையானது.
திண்டுக்கல் புறநகரில் வெங்காய மார்க்கெட் உள்ளது. இம்மார்க்கெட் திங்கள், புதன், வெள்ளியில் கூடுகிறது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வியாபாரிகள் இங்கு வெங்காயத்தை மொத்தமாக வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். வெளிநாடுகளுக்கும் வெங்காயம் ஏற்றுமதியாகிறது.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகள், ராசிபுரம், துறையூர் உள்ளிட்ட இடங்கள் மற்றும் மைசூரிலிருந்து சின்ன வெங்காயம் இங்கு வருகிறது. வழக்கமாக 50 கிலோ கொண்ட 3000 பைகள் அதாவது 150 டன் அளவில் மட்டுமே சின்ன வெங்காயம் வரத்து இருந்தது. ஆனால் வரலாறு காணாத அளவில் நேற்று 9000 பைகள் அதாவது 450 டன் அளவிலான வெங்காயம் வந்துள்ளன. மைசூரிலிருந்து 25 டன் வெங்காயம் வந்துள்ளது. தற்போது வெங்காய சீசன் என்பதால் விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இலங்கையில் பல்லாரிக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் சின்ன வெங்காயத்திற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் ஏற்றுமதியாகிறது.
இவ்வாறு இலங்கைக்கு செல்லும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.37 என்ற நிலையில் துாத்துக்குடியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் போது ரூ.40 க்கு வழங்கப்படுகிறது. அதே உள்ளூர் மார்க்கெட்டான சில்லறை வணிகத்திற்கு வெங்காயம் ரூ.30 க்கு விற்பனையாகிறது. இதுபோல பல்லாரி விலையும் வெகுவாக குறைந்துள்ளது. ரூ.10 தொடங்கி 40 வரை விற்பனையாகிறது.
சில மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம், பல்லாரி விலை ரூ.60 க்கு மேல் நீடித்த நிலையில் இம்மாதம் துவக்கம் முதல் விலை குறைந்துள்ளது.
இலங்கைக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதால் கணிசமான விலை கிடைக்கிறது. ஒரு வேலை உள்நாட்டு விற்பனை என்றால் இதை விட விலை வீழ்ச்சியடைந்திருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

