/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்கள் கிரிக்கெட்: திண்டுக்கல் அணி தேர்வு
/
பெண்கள் கிரிக்கெட்: திண்டுக்கல் அணி தேர்வு
ADDED : ஜன 24, 2024 04:35 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சீனியர் பிரிவு பெண்களுக்கான மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டியில் திண்டுக்கல் பெண்கள் அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., இன்ஜி.கல்லுாரியில் நடந்த போட்டியில் திண்டுக்கல் பெண்கள் அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 168ரன்கள் எடுத்தது. மதுமிதா அன்பு(எல்.ஹெச்.பி.) 59, அபிநயா 32ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த காஞ்சிபுரம் பெண்கள் அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125ரன்கள் மட்டுமே எடுத்தது. மிருதுலா ஸ்ரீராம் 52,கரணம் நந்திதா 27ரன்கள்,அஸ்ரங்கா 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4, விஸ்வா ஸ்ரீநிதி 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
திண்டுக்கல் ஸ்ரீ.வீ. கலை கல்லுாரியில் நடந்த போட்டியில் திண்டுக்கல் அணி 40 ஓவரில் 3 விக்கெட் இழந்து 308ரன்கள் எடுத்தது. மதுமிதா அன்பு 129 (பத்து பவுண்டரிகள் உட்பட), ஜெய்சிவாஸ்ரீ 95(நாட்அவுட்) ரன்கள் எடுத்தனர்.
சேசிங் செய்த அரியலுார் -பெண்கள் அணி 15 ஓவர்களில் 29ரன்கள் மட்டுமே எடுத்தது. விஷ்வஹரிணி 16, ஐஸ்வர்யாமேனன் 12 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் பெண்கள் அணி 279 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இறுதி லீக் சுற்றுக்குள் நுழைகிறது.

