/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடுபெற விண்ணப்பிக்கலாம்
/
சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடுபெற விண்ணப்பிக்கலாம்
சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடுபெற விண்ணப்பிக்கலாம்
சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடுபெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 25, 2025 08:25 AM
திண்டுக்கல்,: திண்டுக்கல் மாவட்டம் கொழுமங்கொண்டானில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுஒதுக்கீடு பெற விரும்புவோர் விண்ணப்பிகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பு : தொப்பம்பட்டி ஊராட்சி கொழுமங்கொண்டானில் புதிதாக பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் 100 வீடுகள் கட்டப்படுகிறது.
இதில் ஆதிதிராவிடர் 40, பிற்படுத்தப்பட்டோர் 25, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 25, மற்றவர்கள் 10 என வீடு ஒதுக்கப்படுகிறது. இதற்கான பயனாளிகள், தேர்வுக்குழு மூலம் தேர்தெடுக்கப்படஉள்ளனர்.
வீடு ஒதுக்கீடு பெற விரும்புவோர் கொழுமங்கொண்டான் ஊராட்சியில் குடியிருக்கும் முகவரியை குறிப்பிட்டு, சாதிச்சான்று, ஆதார், ரேஷன் கார்டு நகல்கள் இணைத்து ஜூலை 8 ம் தேதிக்குள் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கலாம்.
தபால் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மகளிரை தலைமையாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், ஹெச்.ஐ.வி, பாதிப்பு, காசநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வெள்ளம், தீ இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், மீனவர் இலவச வீட்டுவசதித்திட்டம், கலைஞர் வீட்டு வசதித்திட்டம், பசுமை வீடுகள் திட்டம் உள்பட அரசின் இதர திட்டத்தின் மூலம் வீடு பெற்ற பயனாளிகள் விண்ணப்பிக்கமுடியாது.